12-வது ஐந்தாண்டு திட்டகாலத்தில் நாட்டின் வேளாண் உற்பத்தி 4 சதவீதமாக உயரும் என்று பிரதமர் மன்மோகன் சிங் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இது குறித்து மேலும் அவர் தெரிவித்ததாவது ; நடப்பு 11-வது ஐந்தாண்டு திட்ட கால முடிவில் வேளாண் உற்பத்தி 3.5 சதவீத

வளர்ச்சியை எட்டும் என தெரிகிறது. இது முந்தைய 10-வது ஐந்தாண்டு திட்ட முடிவில் 2.5 சதவீதமாகவே இருந்தது. அந்த வகையில் தற்போதைய வளர்ச்சி திருப்திகரமாக இருந்தாலும், எதிர் வரும் 12 வது ஐந்தாண்டு திட்டகாலத்தில் இவ்வளர்ச்சியை 4 சதவீதமாக அதிகரிக்க அரசு அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளும் என்று தெரிவித்தார்.

Leave a Reply