ஹண்டர் சின்ட்ரோம் எனப்படும் மிகக்கொடிய நோயால் பாதிக்கப்பட்ட 12 வயது சிறுவன் ஏரியனுக்கு உதவும் வகையில், அந்தநோய் குறித்து ஆய்வுசெய்ய எய்ம்ஸ் மருத்துவர்கள் குழுவினருக்கு மத்திய சுகாதாரத் துறை இணை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் உத்தரவிட்டுள்ளார்.

தில்லியில் இன்று ஏரியனின் பெற்றோரை அவர்களது இல்லத்தில் சந்தித்துப்பேசிய ஹர்ஷ் வர்தன், உடனடியாக எய்ம்ஸ் மருத்துவர்களை தொலை பேசியில் அழைத்து, இந்தநோய் குறித்து ஆராய்ச்சிசெய்து, மாணவனுக்கு சிகிச்சை அளிக்க உத்தரவிட்டார்.

இந்த அரியநோய்க்கு தற்போது அளிக்கப்பட்டு வரும் சிகிச்சையில் ஒருமருந்தின் விலை ரு.2 லட்சமாக உள்ளது. பல்வேறு சமூக, தன்னார்வ அமைப்புகள்தான் அவனது சிகிச்சைக்கு உதவி செய்துவருகின்றன.

Leave a Reply