நரேந்திர மோடியின் மூன்று நாள் உண்ணாவிரததிற்கு குஜராத்தில் மட்டும் அல்லாமல், அமெரிக்காவிலும் பெரிய அளவில் ஆதரவு காணபடுகிறது. அமெரிக்காவின் பல்வேறு நகரங்களிலும் ஆயிர கணக்கானோர் உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர் .

மத நல்லிணக்கம், அமைதி போன்றவற்றை வலியுறுத்தி நரேந்திரமோடி மூன்று நாள் உண்ணாவிரதத்தை மேற்கொண்டு வருகிறார். இந்த போராட்டத்திற்க்கு பெரும் ஆதரவு உருவாகி யுள்ளது . பெரும்திரளான முஸ்லீம்களும் இந்த போராட்டத்தில் பங்கேற்று ஆதரவு தெரிவித்து வருவது வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில் பாஜக வின் வெளிநாட்டு நண்பர்கள் என்ற அமைப்பு இந்த உண்ணாவிரததிற்கு ஏற்பாடுசெய்துள்ளது. அமெரிக்காவின் 12நகரங்களில் இந்த உண்ணாவிரதம் நடைபெற்று வருகிறது.

Leave a Reply