உபி.,யில் மாயாவதி ஆட்சி நடை பெற்றபோது அரசுக்குசொந்தமான 21 சர்க்கரை ஆலைகளை தனியாருக்கு தாரைவார்த்ததில் 1200 கோடி ரூபாய் அளவுக்கு ஊழல் நடந்துள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது . இந்தகுற்றச்சாட்டு தொடர்பாக லோக்ஆயுக்தா விசாரணைக்கு உபி முதல் மந்திரி அகிலேஷ்யாதவ் உத்தரவிட்டுள்ளார்.

உபி சர்க்கரை கழகத்துக்கு சொந்தமான சர்க்கரை ஆலைகளை தனியாருக்குவிற்க 2007-ம் ஆண்டு அப்போதைய முதல்மந்திரி மாயாவதி முடிவுசெய்தார். இதன்படி, ஜூலை 2010-மார்ச் 2011க்கு இடைபபட்ட காலத்தில் இந்தஆலைகள் தனியாருக்கு விற்கப்பட்டன.

மாயாவதி, தனக்கு நெருங்கிய மது ஆலை உரிமையாளர் பான்ட்டி சத்தாவுக்கு இந்த சர்க்கரை ஆலை களை அடி மாட்டு விலைக்கு விற்று விட்டதாக தெரிகிறது சர்க்கரை ஆலைகளின் நில மதிப்பை மிகவும் குறைந்துமதிப்பிட்டு விற்பனை செய்யப் பட்டுள்ளதால் அரசுக்கு 1200 கோடி ரூபாய் இழப்புஏற்பட்டதாக மத்திய தலைமை கணக்கு_தணிக்கை அலுவலகமும குற்றம் சாட்டியிருந்தது. இதனை தொடர்ந்து லோக் ஆயுத்தா விசாரணைக்கு முதல்வர அகிலேஷ் யாதவ் உத்தரவிட்டுள்ளார்.

Leave a Reply