13 உயிர்கள் கொல்லப்பட்டதற்கு திமுக தான் காரணம். கொலை செய்தவர்கள் காங்கிரஸ் என மத்திய இணையமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் குற்றஞ்சாட்டியுள்ளார்.

ஸ்டெர்லைட் ஆலையை மூடவலியுறுத்தி கடந்த 22ம் தேதி நிகழ்ந்த கலவரத்தைத் தொடர்ந்து அங்கு வன்முறைச் சம்பவங்கள் தொடர்ந்தவண்ணம் உள்ளன. நேற்று 3வது நாளாக தூத்துக்குடி அண்ணாநகர் பகுதியில் பதட்டம் நீடித்துவருகிறது.

இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த பொன்.ராதாகிருஷ்ணன், “ஸ்டெர்லைட் ஆலையை கொண்டுவர காங்கிரஸ், திமுக, அதிமுகவே காரணம். ஸ்டெர்லைட் ஆலைக்கு அனுமதிவழங்கப்பட்ட போதே அதனை எதிர்த்து பாரதிய ஜனதா போராடியது. தூத்துக்குடி மக்கள்மத்தியில் பாஜக குறித்த தவறான பிரசாரம் செய்யப்பட்டுவருகிறது. பாஜக மீதான உள்நோக்கம்கொண்ட பிரசாரங்களை தூத்துக்குடி மக்கள் நம்பவேண்டாம். ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கத்திற்கு முந்தைய காங்கிரஸ் அரசுதான் அனுமதிவழங்கியது. 13 உயிர்கள் கொல்லப்பட்டதற்கு திம.க தான் காரணம். கொலைசெய்தவர்கள் காங்கிரஸ்தான்” என கூறினார்.

Leave a Reply