நாடாளுமன்றத்தின் மீது தாக்குதல்நடத்த உதவிய குற்றவாளி அப்சல்குருவை டிசம்பர் 13ம் தேதி அன்றே தூக்கிலிடவேண்டும் என பாரதிய ஜனதா வலியுறுத்தியுள்ளது.

2001ஆம் ஆண்டு டிசம்பர் 13ம் தேதி நாடாளுமன்றம மீது தாக்குதல்

நடத்தப் பட்டு 11 ஆண்டுகள் நிறைவடைய உள்ள நிலையில், அந்த தாக்குதலுக்கு உதவிகரமாக இருந்த அப்சல்குருவின் கருணைமனு இன்னும் உள்துறை அமைச்சக பரிந்துரையிலேயே இருக்கிறது.

இந்நிலையில், இதுகுறித்து பேசிய பாஜக செய்தித்தொடர்பாளர் ஷான்வாஸ் ஹுசைன், வரும் 13ம் தேதியே அப்சல்குருவை தூக்கிலிட்டால், நாடாளுமன்ற தாக்குதலில் பலியானவர்களுக்கு அதைவிட சிறந்த அஞ்சலி வேறு எதுவுமாக இருக்கமுடியாது. மேலும், மத்திய அரசு, அப்சல்குருவை தூக்கிலிடும் விஷயத்தில், வாக்குகள், தேர்தல், நாடாளு மன்றத்தில் கேள்வி எழும் என்று எதையும் கருத்தில்கொள்ளாமல் நடவடிக்கையை துரிதப்படுத்தவேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

Leave a Reply