மபி.,யில் பாஜக அபார வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியைபிடித்துள்ளது. பா.ஜ.க சட்டமன்ற உறுப்பினர்களின் முதல்கூட்டம் வரும்13 ஆம் தேதி போபாலில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடை பெறுகிறது.

இந்தகூட்டத்தில் மத்திய பிரதேச சட்டமன்றகட்சி தலைவராக சிவராஜ்சிங் சவுகான் மீண்டும் தேர்தெடுக்கப்படுகிறார். இதனையடுத்து அவர் டிசம்பர் 14ல் போபாலில் உள்ள ஜம்போரி மைதானத்தில் முதல்வராக பதவியேற்கிறார்.

இந்தவிழாவில் பா.ஜ.க பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி, பா.ஜ.க மூத்த தலைவர் அத்வானி, பா.ஜ.க தலைவர் ராஜ்நாத் சிங் மற்றும் முக்கிய தலைவர்கள் கலந்துகொள்கின்றனர்.

Leave a Reply