இந்தியாவின் மிகப்பெரிய ராக்கெட்டான ஜிசாட்-14 செயற்கைக்கோள் ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள இஸ்ரோ தளத்திலிருந்து வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.

இந்த செயற்கைகோளை கடந்த ஆகஸ்ட்மாதம் விண்ணில் ஏவப்படுவதாக இருந்தது. கடைசிநேரத்தில் ராக்கெட்டின் இரண்டாவது நிலையில் உள்ள என்ஜின் பகுதியில் திரவ எரிபொருள்கசிந்தது. இதனால், ராக்கெட்டை விண்ணில்செலுத்துவது நிறுத்தப்பட்டது.இந்நிலையில் நிலையில் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டுள்ளது.

ஜிஎஸ்எல்வி. டி5 50 மீட்டர் உயரமும், 415டன் எடையும் கொண்டது இது. அதாவது 80 பெரியசைஸ் யானைகளின் எடைக்கு சமமானதாகும். இதை நிறுத்திவைத்தால் அது 17 மாடிக்கட்டடத்தின் உயரத்திற்கு வரும். மூன்று அடுக்குகளைக்கொண்ட ராக்கெட், ரூ. 350 கோடி பொருட்செலவில் உருவாக்கப்பட்டுள்ளது. 2வது முறையாக இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட கிரையோஜெனிக் என்ஜினை ஜி.எஸ்.எல்.வி.,க்காக பயன் படுத்தியுள்ளது இந்தியா என்பது முக்கியமானது.

மேலும் இந்த சோதனையில் வெற்றி பெற்றதன் மூலம் இன்டிஜியஸ்வகை ராக்கெட்டுகளை தயாரிக்கும் பலபில்லியன் டாலர் மதிப்பிலான வர்த்தக நாடுகளின் பட்டியலில் இந்தியாவும் இணைந்துள்ளது.

Leave a Reply