உபி.,யை 14 பிரிவாக பிரித்து தேர்தல் பணியில் தீவிரமாக இறங்கியுள்ள பாஜக பாராளுமன்ற தேர்தலில் உபி.,யில் அதிக இடங்களை கைப்பற்றும் வகையில் பாஜக மாநிலத்தை 14 பிரிவாக பிரித்து தேர்தல் பணியில் தீவிரமாக இறங்கியுள்ளது.

இதன்படி முதல் கட்டமாக 38 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை தயாரிக்கும் பணியில் கட்சிமேலிடம் ஈடுபட்டுள்ளது.

பூர்வாஞ்சல், பரலி, லக்னோ, வாரணாசி பகுதிகளில் உள்ள பாராளுமன்ற தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் இதில் தயாராகி வருகிறார்கள். பிப்ரவரி மாதம் 7–ந் தேதி அமித்ஷா உ.பி.,யில் இருந்து டெல்லி திரும்பியதும் வேட்பாளர் பட்டியல் இறுதிசெய்யப்படும்.

அதன்பிறகு முதலாவது வேட்பாளர் பட்டியலை கட்சி தலைவர் ராஜ்நாத் சிங் அறிவிக்கிறார். உ.பி.,யின் கிழக்கு பகுதியில் உள்ள பாலி, சலேம்பூர் போன்ற தொகுதிகளில் பாரதீய ஜனதா இதுவரை ஒரு முறை கூட வெற்றி பெற்றது இல்லை. தற்போது இந்தப்பகுதியில் பாரதீய ஜனதா கடும்போட்டியில் குதிக்க திட்டமிட்டுள்ளது. இதற்கான வேட்பாளர்களை தேர்வுசெய்து வருகிறது.

வேட்பாளர் பட்டியல் வெளியானதும் தேர்தல் பிரசாரத்தில் முழுவீச்சில் ஈடுபட திட்டமிட்டுள்ளது. உத்தரபிரதேச மாநிலத்தை 14 பிரிவாகபிரித்து தலைவர்கள் முகாமிட்டு பிரசாரத்தில் ஈடுபட உள்ளனர்.

நாட்டின் மிகப் பெரிய மாநிலமான உத்தரபிரதேசத்தில் 80 தொகுதிகள் இருப்பதால் இங்கு அதிகளவு தொகுதகிளை கைப்பற்றும் விதமாக பாஜக வேட்பாளர்களை கவனமுடன் தேர்வுசெய்து வருகிறது.

Leave a Reply