குவைத்தில் 15 இந்தியர்களுக்கு விதிக்கப் பட்டிருந்த மரணத்தண்டனை, ஆயுள் தண்டனையாகக் குறைக்கப் பட்டுள்ளது.


இதுகுறித்து சுட்டுரை சமூகவலைதளப் பக்கத்தில் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் வெளியிட்டிருக்கும் பதிவுகளில் தெரிவிக்கப் பட்டிருப்பதாவது:


மரணத் தண்டனை விதிக்கப்பட்டு, குவைத்திலுள்ள சிறையில் 15 இந்தியர்கள் அடைக்கப் பட்டிருந்தனர். அவர்களது மரண தண்டனையை குவைத்மன்னர் ஆயுள் தண்டனையாகக் குறைத்துள்ளார். இதேபோல், 119 இந்தியர்களுக்கு அந்நாட்டில் விதிக்கப் பட்டுள்ள தண்டனையை குறைக்கவும் அவர் உத்தரவிட்டுள்ளார். அவரது இந்த அன்பு கூர்ந்த நடவடிக்கைக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.


சிறையில் இருந்து 15 இந்தியர்களும் விடுதலை செய்யப் படுவதற்கு சாத்தியப்படும் அனைத்து உதவியையும் குவைத்திலுள்ள இந்தியத்தூதரகம் அளிக்கும் என்று அந்தப்பதிவுகளில் சுஷ்மா ஸ்வராஜ் குறிப்பிட்டுள்ளார்.
அதேநேரத்தில், 15 இந்தியர்கள் மீதும் எத்தகையக் குற்றச் சாட்டு தெரிவிக்கப்பட்டிருந்தது? எதன் அடிப்படையில் அவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்தது? என்பது போன்ற விவரம் தெரியவில்லை.

Tags:

Leave a Reply