15-ந்தேதியிலிருந்து  தொடர்பிரச்சாரங்கள் மற்றும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் பல கட்சியை சேர்ந்தவர்கள் பா.ஜ.க,.வில் இணையும் விழா மேற்குமாம்பலத்தில் நடைபெற்றது . தஞ்சை, திருச்சி, விருது நகர், கோவில் பட்டி என பல கட்சிகளை சேர்ந்த 200 க்கும் அதிகமானோர் சேர்ந்தனர். மேலும் விடுதலை சிறுத்தை முன்னாள்

செய்திதொடர்பாளர் ஆர்வலனும் பா.ஜ.க வில் இணைந்தார். அவர்களை மாநில பா.ஜ.க தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் வரவேற்றார். பிறகு அவர் நிருபர்களிடம் தெரிவித்ததாவது:-

சில்லரை வர்த்தகத்தில் அன்னிய முதலீட்டுக்கு அனுமதி தந்தது கண்டிக்க தக்கது. இதை எதிர்த்து வரும் 15-ந்தேதியிலிருந்து அடுத்த மாதம் 15-ந்தேதி வரை தொடர்பிரச்சாரங்கள் மற்றும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும். காவிரி பிரச்சினையில் தமிழகத்துக்கு தண்ணீர் தரக்கூடாது என அங்குள்ள சிலகட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தாலும் உச்ச நீதிமன்ற உத்தரவுப் படி மாநில அரசு வினாடிக்கு 9 ஆயிரம் கனஅடி தண்ணீரை திறந்து விட்டுள்ளது. இந்தபிரச்சினையில் தமிழக மக்களின் உரிமையை நிலை நாட்டுவதற்கும் , சுமூக தீர்வை காண்பதற்கும் உடனடியாக அனைத்துகட்சி கூட்டத்தை கூட்டவேண்டும் என்று பொன்.ராதா கிருஷ்ணன் கருத்து தெரிவித்தார் .

Tags:

Leave a Reply