குஜராத்தில் 183மீட்டர் (600 அடி) உயரம்கொண்ட சர்தார் வல்லபாய் படேல் சிலையை அமைக்க நரேந்திரமோடி முடிவு செய்துள்ளார். இதற்காக குஜராத்மாநில அரசு சார்பில் அறக்கட்டளை நிறுவப்பட்டுள்ளது.

7 லட்சம் கிராமங்களில் உள்ள விவசாயிகளிடம் இருந்து ஒருபிடி மண்ணும், உழவுக்கு பயன்படுத்தி தேய்ந்துபோன இரும்பு துண்டுகளும், சிலை அமைக்க சேகரிக்கப்படுகின்றன. தமிழக விவசாயிகளிடமிருந்து இரும்புதுண்டுகளை சேகரித்து அனுப்புவதற்கான ஆலோசனை கூட்டம் நேற்று சென்னையில் நடந்தது.

குஜராத் மாநில உள்துறை அமைச்சர் ரஜினி பாய் படேல் பங்கேற்றார். பாஜ மாநில தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன்,மற்றும் மாநில மாவட்ட நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர். குஜராத் அமைச்சர் ரஜினிபாய்படேல் பேசுகையில்,சிலை அமைப்பை முன்னிட்டு டிசம்பர் 15ம் தேதி நாடுமுழுவதும் 600 இடங்களில் ஒற்றுமை ஓட்டம் நடத்தப்படும். தமிழ்நாட்டில் 60 இடத்தில் . பட்டேலின் பெருமைகளை மாணவர்கள் அறியும்வகையில் அவர்களிடையே கட்டுரைபோட்டி நடத்த தமிழக பாஜக. ஏற்பாடு செய்துள்ளது என்றார்.

Leave a Reply