பிரதமர் நரேந்திரமோடி வரும் ஜூன் 15ம் தேதி பூடானுக்கு செல்கிறார். மோடி பிரதமராக பதவி ஏற்றுக்கொண்ட விழாவில் கலந்து கொண்ட பூடான் பிரதமர் ஷெரிங் தோப்ஹய், தங்களது நாட்டுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளுமாறு மோடிக்கு அழைப்புவிடுத்திருந்தார்.

இதைத்தொடர்ந்து, பூடான் பிரதமர் ஷெரிங் தோப்ஹய்யின் அழைப்பை ஏற்று நரேந்திரமோடி அண்டை நாடான பூடானில் வருகிற 15, 16-ஆம் தேதிகளில் சுற்றுப் பயணம் மேற்கொள்கிறார். மோடி பிரதமர் பதவி ஏற்றுக்கொண்ட பிறகு செல்லும் முதல் வெளிநாட்டுபயணம் இதுவாகும்.

இந்த பயணத்தின் போது, இரு நாடுகளுக்கும் இடையே நிலவும் நல்லுறவு மற்றும் முக்கியவட்டார பிரச்சினைகள் குறித்து விவாதிக்கப்படும் என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Leave a Reply