அமெரிக்காவை சேர்ந்த போர்ப்ஸ் பத்திரிகை, உலகிலேயே மிகவும் சக்திவாய்ந்த நபர்கள் என 72 பேர் பெயரடங்கிய பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில், ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் முதலிடத்தை பிடித்துள்ளார். அமெரிக்க அதிபர் ஒபாமா, சீன அதிபர் ஜிஜின்பிங், ஜெர்மன் பிரதமர் ஏஞ்சலா மெர்கல் உள்ளிட்டோர் அடுத்தடுத்த இடங்களைப் பிடித்துள்ளனர்.பிரதமர் நரேந்திர மோடி, இந்த பட்டியலில் 15-வது இடத்தில் உள்ளார்.

ரிலையன்ஸ் அதிபர் முகேஷ் அம்பானி 36-வது இடத்தையும் , ஏர்சலார் மிட்டல் அதிபர் லட்சுமிமிட்டல் 57-வது இடத்தையும் , மைக்ரோசாப்ட் தலைமை செயல் அலுவலர் சத்யாநாடல்லா 64-வது இடத்தையும் பிடித்துள்ளனர்.

Leave a Reply