மகாராஷ்டிர சட்டப் பேரவைத் தேர்தலில் பாஜக கூட்டணி 154 தொகுதிகளில் வெற்றிபெற்று, ஆட்சி அமைக்க வாய்ப்புள்ளதாக அண்மையில் நடைபெற்ற கருத்துக் கணிப்பில் தகவல் வெளியாகியுள்ளது.

பிரபல 'தி வீக்' பத்திரிகை மற்றும் 'ஹன்சா ரிசர்ச்' உள்ளிட்டவை இணைந்து நடத்திய கருத்துக்கணிப்பு முடிவில், 288 தொகுதிகள் கொண்ட மகாராஷ்டிராவில் பாஜக.வுக்கு 154 தொகுதிகள் கிடைக்க வாய்ப்புள்ளதாக தெரியவந்துள்ளது. சிவசேனாக்கு 47 தொகுதிகளும், காங்கிரஸ்க்கு 25 தொகுதிகளும், தேசியவாத காங்கிரஸ்க்கு 17 தொகுதிகளும், மகாராஷ்டிரா நவநிர்மான் சேனா கட்சிக்கு 10 தொகுதிகளும், இதரகட்சிகளுக்கு 15 தொகுதிகளும் மற்றும் சுயேட்சை வேட்பாளர்களுக்கு 20 தொகுதிகளும் கிடைக்க வாய்ப்புள்ளதாகத் தெரியவந்துள்ளது.

சதவீதங்களின் படி, பா.ஜ.க. 36.50 சதவீதமும், சிவசேனா 17.10 சதவீதமும், காங்கிரஸ் 11.97 சதவீதமும், தேசியவாதகாங்கிரஸ் 5.85 சதவீதமும், மகாராஷ்டிரா நவநிர்மான் சேனா 5.11 சதவீதமும் பெற வாய்ப்புள்ளதாக அதில் கூறப்பட்டுள்ளது.

இதற்கிடையே மற்றொரு அமைப்பு நடத்திய கருத்து கணிப்பிலும் பா.ஜ.க.,வுக்கு 133 முதல் 154 இடங்கள்வரை கிடைக்கும் என்று தெரிவிக்கப் பட்டுள்ளது.

சிவசேனாவுக்கு 47 முதல் 57 இடங்கள் வரை யும், காங் கிரசுக்கு 25 முதல் 30 இடங்கள் வரையும், தேசியவாத காங்கிரசுக்கு 17 முதல் 33 இடங்களும், மராட்டிய நவ நிர்மான் கட் சிக்கு 10 இடங்க ளும், சுயேச்சைக ளு க் கு 25 முதல் 35 இ டங்களும் கிடைக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

Leave a Reply