கல்வி உதவித்தொகை ஆக.,16 முதல் 18 வரை தொடர்_உண்ணா விரத போராட்டம் பாரதிய ஜனதா மாநில தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது . ”டெசோவை மீண்டும் தொடங்க உள்ளதாகவும் , ஆக.,12ல் மாநாடை நடத்தபபோவதாக கருணாநிதி தெரிவித்திருக்கிறார். ஆட்சியில் இல்லாத போது இலங்கை தமிழர்களை பற்றி அதிகம் கவலைப்படுகிறார்.

ஆட்சியிலிருந்து, மத்திய அரசை ஆட்டிப்படைக்கும் அதிகாரம் இருந்த போதும் , இதை பற்றி பேசவில்லை. தேசிய ஊரக குடிநீர் திட்டத்தின்கீழ் ஒதுக்கப்பட்டதொகை செலவழிக்கப்பட வில்லை, என்று மத்திய அரசு கூறியுள்ளது. ஆனால் தமிழக அரசோ செலவுசெய்ததற்கான பட்டியலை தந்துள்ளது .

சிறுபான்மை மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்குவதை போன்று இந்துமதத்தில் இருக்கும் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தபபட்ட, மிகவும்பிற்படுத்தப்பட்ட குழந்தைகளுக்கும் தகுதி அடிப்படையில் உதவித்தொகை வழங்கவேண்டும்.

இதை வலியுறுத்திபாரதிய ஜனதா சார்பில் ஆக.,16 முதல் 18 வரை சென்னையில் தொடர்_உண்ணா விரத போராட்டத்தை நடத்த இருக்கிறோம் . மதுவால் கொலை, கொள்ளை பெருகிவருகிறது. காவல்துறையின் மரியாதை நாளுக்கு நாள் தேய்ந்துவருகிறது. அவர்கள் அதிகாரமற்றவர்கள் போன்று செயல் படுகின்றனர். காவல்துறை அரசியல் தலையீடின்றி செயல்படவேண்டும்’ என கூறினார்.

Leave a Reply