நிழல் உலகதாதா தாவூத் இப்ராஹிம், பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ உதவியுடன் ஆண்டு தோறும் இந்தியாவுக்குள் 1,600கோடி அளவுக்கு கள்ளரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் விட்டு வருவதாக லஷ்கர் பயங்கரவாதி அப்துல்கரீம் துன்டா திடுக்கிடும் தகவலை தெரிவித்துள்ளான்.

70 வயதான அப்துல்கரீம் துன்டாவை, கடந்த வாரம் டெல்லி போலீசார் கைதுசெய்தனர். அவரை மத்திய உளவுத்துறையினரும், டெல்லி பயங்கரவாத தடுப்புப்படை அதிகாரிகளும் கடந்த மூன்று நாள்களாக விசாரித்துவருகின்றனர். விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்களை அவர் வெளியிட்டு வருகிறான்.

இந்தியாவால் தேடப்பட்டு வரும் நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிம் பாகிஸ்தானில் கராச்சி நகரில் ஐ.எஸ்.ஐ பாதுகாப்பில் வசித்து வருவதாகவும். தாவூத் இப்ராஹிம் தலைமையில் செயல் படும் குழுக்கள் ஆண்டுதோறும் சிலஏஜெண்டுகள் மூலம் 1,600 கோடி அளவுக்கு கள்ள நோட்டுகளை இந்தியாவுக்குள் புழக்கத்தில் விட்டு வருவதாகவும் துன்டா தெரிவித்துள்ளான்.

Leave a Reply