ஆப்கானிஸ்தானின் தென்பகுதியில் தாலிபான்களின் கட்டுப்பாட்டில் இருக்கும் சமிண்தாவர் கிராமத்தை சேர்ந்தவர்கள் இசைநிகழ்ச்சி நடத்தினர்.

அங்கு விழாக் காலங்களில் ஆதிவாசி பழங் குடியின பெண்கள் நடன மாடுவது வழக்கமான ஒன்று. எனவே இந்நிகழ்ச்சியில் 2 பெண்கள் நடனமாட மற்றவர்கள் இசைநிகழ்ச்சியை பார்த்து ரசித்துகொண்டிருந்தார்கள்.

அப்போது அந்தகிராமத்திற்குள் புகுந்த தீவிரவாதிகள், நிகழ்ச்சியில் கலந்துகொண்டவர்களை பிடித்து தலைகளை வெட்டினர். இதில் இரண்டு பெண்கள் உள்ளிட்ட 17 பேர் தலை துண்டிக்கபட்டு கொலைசெய்யப்பட்டனர். இது தலிபான்களின் செயலாகத்தான் இருக்கும் என அந்தபகுதி அதிகார வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Leave a Reply