17 வயது மைனரைத்தான் (சிறுவன்) முதலில் தூக்கிலிடவேண்டும் தன மகளை சீரழித்தவர்களில் ஒருவரான 17 வயது மைனரைத்தான் (சிறுவன்) முதலில் தூக்கிலிடவேண்டும் என டெல்லியில் ஓடும்பேருந்தில் கற்பழிக்கப்பட்டு இறந்த மாணவியின் தந்தை கருத்து தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், என் மகளை சீரழித்த ஆறு பேரில் 17 வயது சிறுவனும் அடக்கம். இந்த வயசிலேயே அவர் இத்தனை அக்கிரமங்களை செய்தால் பெரியவனாக ஆனால் அவர் என்னவெல்லாம் செய்வாரோ? அவர்தான் என் மகளை இரக்கம் இன்றி கொடுமை படுத்தியுள்ளார். அதனால் அவரைத்தான் முதலில் தூக்கிலிடவேண்டும். எனவே அரசு அந்த சிறுவனுக்கு இரக்கம்காட்டமால் அவனையும் மற்ற 5 பேருடன் சேர்ந்து தூக்கிலிடவேண்டும்.

Leave a Reply