சோனியா காந்தியின் வெளிநாட்டு சுற்று பயணங்களுக்கு மட்டும் ரூ.1880 கோடி செலவு  சோனியா காந்தியின் வெளிநாட்டு சுற்று பயணங்களுக்கு கடந்த மூன்றுவருடத்தில் மட்டும் மத்திய அரசு ரூ.1880 கோடி செலவழித்துள்ளதாக குஜராத் முதல்வர் நரேந்திரமோடி குற்றம் சுமத்தியுள்ளார்.

எமது அரசு அளவுக்கு அதிகமாக செலவு செய்வதாக காங்கிரஸ் தோழர்கள் குற்றம் சுமத்துகிறார்கள் அவர்களிடம் நான் ஒன்று கேட்க விரும்புகிறேன்.

காங்கிரஸ் தலைவர் சோனியாவின் வெளிநாட்டு பயண செலவு மட்டும் கடைசி மூன்று வருடங்களில் ரூ.1,880 கோடியாக உள்ளது. இது பொது மக்களின் அரச கருவூல நிதியி லிருந்தே எடுக்கப்பட்டுள்ளது. இதனை உண்மை இல்லை என மறுக்கமுடியுமா என கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும், ஜம்நகர், பாவநகர்,ஜுனாகத், ராஜ்கோட் உள்ளிட்ட தொகுதிகளுக்கு வருடத்திற்கு செலவிடும் தொகையைவிட சோனியா காந்தியின் வெளிநாட்டு பயணங்களின்போது, NACHATTHIRA ஹோட்டல்களுக்கு அதிகம் செலவிடப் படுகிறது. டெல்லி சுல்தான்களிடம் இது குறித்து நான் கேட்க விரும்புகிறேன். ஏழை எளிய மக்களின் பணத்தை இப்படி அனாவசியமாக செலவழிக்க அனுமதிப்பதன் கட்டாயம்தான் என்ன? என கேள்வி எழுப்பினர் .

Tags:

Leave a Reply