ஓகிபுயலால் பாதிக்கப்பட்ட குமரி மாவட்டத்தை டிசம்பர் 19-ம்தேதி பிரதமர் நரேந்திரமோடி பார்வையிட உள்ளார். புயலால் பாதிக்கப்பட்ட நீரோடி, தூத்தூர், உள்ளிட்ட மீனவகிராமங்களை பிரதமர் மோடி பார்வையிட உள்ளார். பிரதமர் மோடி வருகையை ஒட்டி பாதுகாப்பு படை வீரர்கள் குமரி மாவட்டத்தில் ஆய்வு மேற்கொண் டுள்ளனர். வங்கக்கடலில் உருவான ஓகி புயலால் கன்னியாகுமரி மாவட்டம் கடுமையாக பாதிக்கப்பட்டது.

இதனால் கன்னியாகுமரி மாவட்டத்தில் பலத்தசேதம் ஏற்பட்டது. கடலுக்கு மீன்பிடிக்க சென்ற 600க்கும் மேற்பட்ட மீனவர்கள் இதுவரை கரைதிரும்பவில்லை. ஏராளமான மீனவர்கள் மீட்கப்படாத நிலையில் தேடுதல் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதனால் அவர்களின் குடும்பத்தினர் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.

Leave a Reply