மினரல் வாட்டர் அடுத்த மூன்று ஆண்டுகளில் மினரல் வாட்டர் விற்பனை ரூ.15,000 கோடியாக அதிகரிக்கும் என ஐகான் மார்க்கெட்டிங் கன்சல்டண்ட்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் தெரிவித்துள்ளது .

ஆண்டுக்கு 19% வளர்ச்சியுடன் தற்போது ரூ.8,000கோடி சந்தை

மதிபை கொண்டுள்ள இத்துறை, நடப்பு நிதிஆண்டில் ரூ.10,000 கோடியை எட்டும் என எதிர்பார்க்கபடுகிறது . சர்வதேச அளவில் கடந்த 5 ஆண்டுகளில் இத்துறை 40-45 சதவீத வளர்ச்சி கண்டுள்ளது. தற்போதைய சந்தை மதிப்பு 9,000 கோடி டாலர் (ரூ.4.95 லட்சம் கோடி) என மதிப்பிடப்பட்டுள்ளது.

அகில இந்திய அளவில் பிரபலமாக இருக்கும் நிறுவனங்களின் விற்பனை ரூ.4,000 கோடியாகவும், பிராந்திய அளவில் இயங்கி வரும் நிறுவனங்களின் சந்தை மதிப்பு ரூ.2,000 கோடியாகவும், அமைப்பு சாரா நிறுவனங்களின் விற்பனை ரூ.1,600 கோடியாகவும் உள்ளது.

இத்துறையில் சுமார் 2,500 பிராண்டுகள் தற்போது உள்ளன. இவற்றில் ஏறத்தாழ நான்கில் மூன்று பங்கு உள்ளூர் தயாரிப்புகளாக உள்ளன.

Leave a Reply