1969-ம் வருடத்தை போன்று  அதிசயம் நிகழும் சென்ற 1969-ம் வருடம் நடைபெற்ற குடியரசு தலைவர் தேர்தலில் காங்கிரஸ்சின் குடியரசு தலைவர் வேட்பாளர் தோற்கடிக்கப்பட்டதை போன்று இந்த தேர்தகிகும் அதிசயம் நிகழும் என பி.ஏ.சங்மா தெரிவித்துள்ளார்.

இது குறித்து மேலும் அவர் தெரிவித்ததாவது குடியரசு தலைவர் தேர்தலில் போட்டியிடும் எனக்கு பா.ஜ.க உள்ளிட்ட 18 அரசியல் கட்சிகள் இது வரை எனக்கு ஆதரவு அளித்துள்ளன. மேலும் இது வரை முடிவு எடுக்காத சிலகட்சிகளும் தனக்கு ஆதரவு தரும் என்று நம்புகிறேன். அந்த கட்சிகளும் தங்கள் முடிவை ஓரிருநாளில் அறிவிக்க உள்ளன.

கடந்த 1969-ம் வருடம் நடந்த குடியரசு தலைவர்தேர்தலில் காங்கிரஸ் வேட்ப்பாளர் நீலம் சஞ்ஜீவ ரெட்டியை எதிர்த்து போட்டியிட்ட வி.வி.கிரி வெற்றிபெற்று புதிய சரித்திரத்தை படைத்தார். அதுவரை குடியரசு தலைவர் எனும் ஒரு பதவி உள்ளது என்பது குறித்து அறிந்திராத பாமரமக்கள் மத்தியிலும், முதன் முறையாக அந்தபதவியைப் பற்றி தெரிந்துகொள்ள வேண்டும் எனும் உணர்வு ஏற்பட்டது. 43 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் அதை போன்ற நிலை உருவாகும் என நம்புகிறேன் என்றார் .

Leave a Reply