2ஜி அலைக் கற்றை ஒதுக்கீடு மோசடியானது தான் என்று மத்திய நிதிஅமைச்சர் அருண்ஜெட்லி தெரிவித்தார்.

இது குறித்து அவர் கூறுகையில், 2ஜி அலைக் கற்றை ஒதுக்கீடு மோசடியானது தான் என்பதற்கு, முறைகேடு குற்றச் சாட்டுகளுக்கு பிறகு நடைபெற்ற 2ஜி ஏலமே நல்ல உதாரணம். ஏனெனில் அதன் பிறகு நடைபெற்ற ஏலங்களின் போது அதிக விலைக்குதான் ஏலம்கொடுக்கப்பட்டது. ஆனால் 2ஜி அலைக் கற்றையோ அரசுக்கு பெரும் இழப்பை ஏற்படுத்தியது.

சிபிஐ சிறப்பு நீதிமன்றம் இன்று வழங்கிய தீர்ப்பை ஏதோ, தங்கள்நேர்மைக்கு கிடைத்த பேட்ஜ் என்பதை போல காங்கிரஸ் தலைவர்கள் கருதி கருத்துகூறி வருகிறார்கள். உச்ச நீதிமன்றம், 2ஜி அலைக்கற்றை நேர்மையாக நடக்கவில்லை என 2012லேயே கூறியுள்ளது. சிபிஐ சிறப்புநீதிமன்ற தீர்ப்பை பரிசீலனை செய்து, விசாரணை அமைப்புகள் தேவைப்படும் நடவடிக்கையை எடுப்பார்கள். இவ்வாறு அருண்ஜெட்லி தெரிவித்தார்.

Leave a Reply