2ஜி வழக்கில் நீதிவெல்லும் வரை காத்திருப்போம் என்று பாஜக தேசியச் செயலாளர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார்.

நாடுமுழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய 2ஜி வழக்கின் தீர்ப்பு வெளியானது. காலை 11 மணியளவில் வெளியான இந்தவழக்கின் தீர்ப்பில் குற்றம்சாட்டப்பட்ட ஆ.ராசா, கனிமொழி உட்பட அனைவரும் விடுதலை செய்யப்படுவதாக நீதிபதி ஓ.பி.சைனி உத்தரவிட்டார். இந்ததீர்ப்புக்கு அரசியல் கட்சி தலைவர்கள் பலர் பல்வேறு கருத்துகளை கூறி வருகின்றனர். 

இந்நிலையில் 2ஜி வழக்கில் தீர்ப்பு வெளியானது குறித்து, பாரதிய ஜனதா கட்சியின் தேசியச்செயலாளர் ஹெச்.ராஜா தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்துதெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், “குன்ஹா தீர்ப்பை கொண்டாடியவர்கள் உண்டு. குமாரசாமி தீர்ப்பால் குதூகலமான வர்களைப் பார்த்தோம். இறுதியில் உச்ச நீதிமன்றத்தில் நீதி வென்றது. 2ஜி வழக்கில் சிபிஐ, அமலாக்கத்துறை மேல்முறையீடு செய்ய வேண்டும். உச்ச நீதிமன்றம் உரிமங்களை ரத்துசெய்ததே ஊழலுக்கு ஆதாரம். நீதி வெல்லும். காத்திருப்போம்” என்று கூறியுள்ளார். முன்னதாக 2ஜி வழக்கில் மத்திய அரசு உடனடியாக மேல்முறையீடு செய்யவேண்டும் என்று சுப்பிரமணியன் சுவாமி தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply