பிரதமர் மோடி தலைமையிலான பாஜக ஆட்சியமைத்து இன்றுடன் 2 ஆண்டுகள் நிறைவுசெய்து மூன்றாம் ஆண்டை அடியெடுத்து வைத்துள்ளது.

இதனனை விமரி சையாக கொண்டாடும் வகையில் சிறப்பு ஏற்பாடுகளை பாஜக மேற்க்கொண்டுள்ளது. பாஜக மூன்றாம் ஆண்டுதுவங்கும் இன்று தில்லியில் பிரம்மாண்ட பேரணிக்கு ஏற்பாடுசெய்துள்ளது. மே 28-ம் தேதியன்று தில்லி இந்தியாகேட் பகுதியில் முன்னேற்ற படிகள் என்ற தலைப்பில் பிரம்மாண்ட விழாவிற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பிரதமர் பொறுப்பை ஏற்றபிறகு கடந்த 2 ஆண்டுகளில் மோடியின் செயல்பாடுகள் எப்படி இருந்தன என்று உலக அளவில் பல்வேறுஅமைப்புகள் ஆய்வுகள் நடத்தி தகவல்கள் வெளியிட்டுள்ளன. இந்த 2 ஆண்டுகளில் பிரதமர் மோடி மிகவும் சிறப்பாகசெயல்பட்டு இருப்பதாக ஒட்டுமொத்த ஆய்வில் தெரியவந்துள்ளது.

இந்தியாவின் இந்தவேகமான முன்னேற்றத்துக்கு பிரதமர் மோடி எடுத்துள்ள முக்கியமுடிவுகளே காரணம் என்றும் சுட்டி காட்டப்பட்டுள்ளது. மேலும், பிரதமர் பதவி ஏற்றபிறகு கடந்த 2 ஆண்டுகளில் ஒருநாள் கூட விடுப்பு எடுக்கவில்லை என்று பிரதமர் அலுவலகம் தகவல் தெரிவித்துள்ளது.

Leave a Reply