பிரதமர் நரேந்திரமோடி ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (SCO) உச்சிமாநாடு கலந்துகொள்ள 2 நாள் சுற்றுப் பயணமாக உஸ்பெகிஸ்தான் நாட்டின் தலைநகர் தாஷ்கெண்ட் சென்றடைந்தார்.

அவருக்கு அந்நாட்டின் பிரதமர் ஷாவ் காத் மிர்ஸியோயவ் சிறப்பான வரவேற்பளித்தார். இந்தமாநாட்டின் போது சீன அதிபர் ஜி ஜின்பிங், ரஷிய அதிபர் விளாடிமிர்புட்டின் மற்றும் உஸ்பெகிஸ் தான் அதிபர் இஸ்லாமியம் கரிமோவ் ஆகியோருடன் பேச்சு வார்த்தை நடத்த உள்ளார்.  என்எஸ்ஜி. எனப்படும் அணு சக்தி விநியோக குழுவில் இந்தியா இணைவதை சீனா தொடர்ந்து எதிர்த்துவருகிறது.

இந்த சூழ்நிலையில் தாஷ் கண்ட் நகரில் நடக்க உள்ள எஸ்சிஓ., மாநாட்டில், சீன அதிபர் ஜி-ஜிங்பிங்கை, பிரதமர் மோடி சந்திக்க வுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. எஸ்.சி.ஓ., ( ஷாங்கை ஒத்துழைப்பு ) அமைப்பில் சீனா, கஜகஸ்தான், கிர்கிஸ்தான், ரஷ்யா, தஜிகிஸ்தான்,உ ஸ்பெஸ்கிஸ்தான் ஆகிய 6 நாடுகள் உள்ளன.

கடந்த ஆண்டு நடந்தமாநாட்டில் இந்தியா, பாகிஸ்தான் நாடுகள் உறுப்பினராக இணைய அனுமதிக்கப் பட்டுள்ளது. இதற்கான அதிகாரப் பூர்வ அறிவிப்பு தாஷ்கண்ட் மாநாட்டில் வெளியாகும் என தெரிகிறது. 

Leave a Reply