2 லட்சம் கிராமங்களில் அனைத்துவீடுகளிலும் கழிப்பறைகள் இல்லை என மத்திய அரசு வெளியிட்டுள்ள புள்ளிவிபரங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2019-ம் ஆண்டு அக்டோபர் மாதத்திற்குள் தூய்மை இந்தியாதிட்டத்தின் கீழ் திறந்தவெளியில் மலம் கழிப்பதை முடிவுக்கு கொண்டுவர மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

இதற்காக அனைத்து வீடுகளிலும் கழிப்பறை அமைக்க மத்திய அரசு முயற்சி மேற்கொண்டுவருகிறது. குடிநீர் மற்றும் சுகாதார வசதிகள் தொடர்பாக அனைத்து மாநிலங்களிடமும் மத்திய அரசு அறிக்கைகோரி இருந்தது. இதில் 6,05,828 கிராமங்களில், 33 சதவீத கிராமங்கள் திறந்தவெளியில் மலம் கழிக்காத கிராமங்களாக அறிவிக்கப் பட்டுள்ளன.

அதே சமயம் 2,00,959 கிராமங்களில், 52,593 கிராமங்கள் 100 சதவீதம் கழிப்பறைகொண்ட கிராமங்களின் பட்டியலில் இடம்பெறவில்லை என மாத்திரை அரசு தெரிவித்துள்ளது. இதற்காக அனைத்துமாநில அரசுகளும் முயற்சி மேற்கொள்ள வேண்டும் என மத்திய சுகாதார அமைச்சகம் கேட்டுக் கொண்டுள்ள

Leave a Reply