2 ஜி – விவகாரம் தொடர்பாக எடுக்கபட்ட அனைத்து முடிவுகளும் ப.சிதம்பரத்துக்கும் தெரியும் முதலில் அவரை கூப்பிட்டு ஒருசாட்சியாக கூட விசாரியுங்கள் என்றும், இதற்க்கு பிறகு பிரதமரை அழைப்பதா வேண்டாமா என கோர்ட் முடிவுசெய்யட்டும் என்று சி.பி.ஐ.,சிறப்பு நீதிமன்றத்தில் ராஜாவின் வக்கீல் வாதாடியது காங்கிரஸ் தரப்புக்கு பெரும் அதிர்ச்சியை தந்துள்ளது

ராஜாவின் வக்கீல் சுஷீல்குமார் வாதிடுகையில் : இந்த ஸ்பெக்டரம் தொடர்பான விஷயங்கள் மற்றும் உண்மைநிலை அனைத்தும் அப்போதைய நிதி அமைச்சராக இருந்த சிதம்பரத்திற்கு தெரியும். ராஜாவுக்கும், சிதம்பரத்திற்கு ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு தொடர்பாக எவ்வித கருத்துவேறுபாடும் உருவாகவில்லை . இதன்படி பார்த்தால் அமைச்சரவையில் இருக்கும் அனைவரும் விசாரணையை சந்திக்கவேண்டும். ஆனால் எனது கட்சிகாரர் மட்டும் சிறையில் அடைக்கபடுவது ஏன் என கேள்வி எழுப்பினார்.

Tags:

Leave a Reply