ஒருவர் 2வது முறையாக பா.ஜ.க   தலைவர் பதவிக்கு வார வழிவகுக்கும் சட்டத்திருத்தத்திற்கு ஒப்புதல் வழங்கப்பட்டது பாரதிய ஜனதா தலைவர் நிதின்கட்காரி முறைப்படி இரண்டாவது முறையாக கட்சி தலைவராக வர தேவையான கட்சி சட்டத்திருத்தத்திற்கு ஒப்புதல் வழங்கப்பட்டது . இதைதொடர்ந்து அவர் இரண்டாவது முறையாக பாரதிய ஜனதா தலைவராகிறார்.

பாரதிய ஜனதா தலைவர் நிதின்கட்காரியின் பதவி காலம் வரும் டிசம்பர் மாதத்துடன் முடிவடைவதை தொடர்ந்து அவரை இரண்டாவது முறையாக தலைவராக தேர்ந்தெடுக்க கட்சிசட்டத்தில் திருத்தம் கொண்டுவருவது தொடர்பான தீர்மானம் மும்பையில்_நடந்த தேசிய செயற் குழு கூட்டத்தில் நிறைவேற்றபட்டது.

இதைதொடர்ந்து அரியானாவில் நடந்து வரும் தேசிய செயற் குழு கூட்டத்தில் தகுதி உடைய ஒருவர் 2வது முறையாக கட்சியின் தலைவர்பதவிக்கு வரலாம் என சட்ட திருத்தத்திற்கு நேற்று ஒப்புதல் வழங்கப்பட்டது . இந்த சட்ட திருத்த தீர்மானத்தை கட்சியின் முன்னாள் தலைவர் ராஜ்நாத்சிங் கொண்டு வந்தார். அதை மற்றொரு_முன்னாள் தலைவரான வெங்கையா நாயுடு வழிமொழிந்தார். இதைதொடர்ந்து கட்காரி 2வது முறையாக பாரதிய ஜனதாவின் தலைவராகிறார். அவரது பெயரை ராஜ்நாத்சிங் முன் மொழிந்தார். கட்காரி வரும் 2015 ம் ஆண்டு டிசம்பர் மாதம்வரை இந்த பதவியில் இருப்பார்

Tags:

Leave a Reply