2 2ஜி' மறுஏலம் விட்டதிலும்  முறைகேடு ஜி’ மறுஏலம் விட்டதில் முறைகேடு நடந்திருக்கிறது . மத்திய கணக்கு தணிக்கை அதிகாரியின் மதிப்பீடுகள் தவறானது என்று , பிரசாரம் செய்வதற்க்காக, இந்த முறைகேடு அரங்கேற்றப்பட்டுள்ளது, என்று பாரதிய ஜனதா மூத்த தலைவர், முரளி மனோகர்ஜோஷி கருத்து தெரிவித்துள்ளார்

இது குறித்து மேலும் அவர் கூறியதாவது ; உச்ச நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து , 2ஜி ஒதுக்கீட்டுக்கு, சமீபத்தில் மறுஏலம் விடப்பட்டது. மறு ஏலத்தின் மூலம், 40 ஆயிரம்கோடி ரூபாய், அளவுக்கு வருவாய் கிடைக்கும் என்று , எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், எதிர் பார்த்த அளவு வருவாய் கிடைக்கவில்லை.

இந்த ஏலத்திலும் முறைகேடு நடந்துள்ளது. முக்கியமான தொலைதொடர்பு நிறுவனங்கள் இந்த ஏலத்தில் பங்கேற்க்கவில்லை. இதற்கு பின்னணி உள்ளது. ஏற்கனவே நடைபெற்ற , “2ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலத்தில், 1.76 லட்சம்கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டதாக, மத்திய கணக்கு_தணிக்கை அதிகாரி தெரிவித்திருந்தார்.அவரது மதிப்பீடு தவறானது என்று , மக்களிடம் பிரசாரம் செய்ய , மறுஏலத்தில் முறைகேடு அரங்கேற்றப்பட்டுள்ளது.

இதுபற்றி , முறையான விசாரணை நடத்தவேண்டும். தணிக்கை அதிகாரியின் மதிப்பீடு தவறு என்று , காங்கிரஸ் கட்சியினர், தற்போது பிரசாரம் செய்துவருவதை, கவனிக்கவேண்டும்.மத்திய கணக்கு தணிக்கை அதிகாரியை விமர்சிப்பதற்கு யாருக்கும் உரிமைஇல்லை. அவரது மதிப்பீடு, தவறு என்று கருதினால், பாராளுமன்றத்தில் அவருக்கு எதிராக கண்டனதீர்மானம் கொண்டுவர வேண்டுமே தவிர, அவரை விமர்சிக்க கூடாது என்று முரளி மனோகர் ஜோஷி கருத்து தெரிவித்துள்ளார்.

Tags:

Leave a Reply