கோல் இந்தியா நிலக்கரி உற்பத்தியை அதிகரித்துவருவதால் அடுத்த 2-3 ஆண்டுகளில் இறக்குமதியை நிறுத்துவது சாத்தியம் என்று மத்திய அமைச்சர் பியூஷ்கோயல் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

சர்வதேச அளவில் நிலக்கரி உற்பத்தியில் மிகப் பெரிய நிறுவனமாக கோல் இந்தியா உள்ளது. இன்று செயல் பாட்டில் உள்ள மின் திட்டங்களுக்கும், எதிர் காலத்தில் நிறுவப்பட உள்ள அனல் மின் நிலையங்களுக்கு போதியளவு நிலக்கரி சப்ளைசெய்யும் வகையில், 2019-ம் ஆண்டிற்குள் தனது உற்பத்தி திறனை இரண்டுமடங்கு அதிகரித்து 100 கோடி டன்னாக அதிகரிக்க வேண்டும் என்று கோல் இந்தியா நிறுவனத்திடம் மத்திய அரசு வலியுறுத்தி யுள்ளது.

2022-ஆம் ஆண்டிற்குள் நாட்டின் அனைத்து பகுதிகளுக்கும் தடையில்லா மின்சாரம் வழங்கப்படும் என பிரதமர் நரேந்திரமோடி உறுதி அளித்துள்ளார். நிலக்கரிதுறையில் கோல் இந்தியாவுடன் போட்டியிடும் வகையில் தனியார் நிறுவனங்களும் ஈடுபட நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் கூறியுள்ளார். இன்றைய நிலையில் நாட்டின்மொத்த நிலக்கரி உற்பத்தியில் கோல் இந்தியாவின் பங்கு 80 சதவீதமாக உள்ளது.

இந்நிலையில், நிலக்கரி இறக்குமதியை நிறுத்தும் இலக்கு உறுதியாக எட்டப்படும் என்றும், இப்போதுள்ள சூழலில் நிலக்கரி இறக்குமதியால் ஏற்படும் அன்னியசெலாவணி இழப்பு நடப்புகணக்கு பற்றாக் குறையில் தாக்கத்தை ஏற்படுத்தாது என உறுதியாக நம்புவதாகவும் கோயல் தெரிவித்தார்.

Leave a Reply