ஸ்ரீல ப்ரபுபாதா ஸ்ரீல ப்ரபுபாதா அதன் பின்னர் அமேரிக்காவின் வெவ்வேறு நகரங்களில் கிருஷ்ண உணர்வை பரப்பும் மையங்களை ஏற்படுத்தினார். அப்போது அமேரிக்காவில் "ஹிப்பி" இயக்கங்கள் பெருகிக் கொண்டிருந்த காலம். ஹிப்பிக்கள் எதை பற்றியும் கவலைப்படாமல் திரிபவர்கள். எந்த கலாசார வரம்புக்குள்ளும் சிக்காதவர்கள். மனம் போன போக்கில் வாழ்பவர்கள்.

ப்ரபுபாதாவின் கிருஷ்ண உணர்வு மையங்களுக்கு அவர்கள் வருவது உண்டு. அவர் கொடுக்கும் பிரசாதத்தை ருசிப்பார்கள், ஆரத்தி எடுத்து வைக்கப்பட்ட விளக்கில் கஞ்சா மற்றும் சுருட்டை பற்ற வைத்து புகைப்பார்கள்.

ப்ரபுபாதாவோ அனைத்தையும் கிருஷ்ணருக்கே அர்ப்பணித்தார். "ஒ ப்ரபு இவர்களுக்குள் நல்லெண்ணத்தை கொண்டு வாருங்கள்" என்று கிருஷ்ணரை ப்ரார்த்திப்பார். அவரின் பிரார்த்தனை நிறை வேறாமல் போகுமா ? பல ஹிப்பிகளின் உள்ளத்தில் மாற்றம் துளிர் விட்டது. குளிக்காமல் பல நாட்கள் கழிப்பவர்கள் இறைவனின் கருனையால், விடிகாலை எழுந்து மங்கள் ஆரத்தியில் பங்கெடுக்க தொடங்கினார்கள். தீய பழக்கங்களை கை விட்டார்கள், இறைவனின் நாமத்தை சதா உச்சரிக்க தொடங்கினார்கள். விளைவு ? பின்நாட்களில் அவர்கள் "இஸ்கான்" எனும் பிரமாண்டமான இயக்கத்தில் மிகப் பெரும் செயல்புரிந்து, அது மேலும் மேலும் பரவ வகையில் செயல் புரிந்தார்கள்.

என்ன இருக்கிறது இந்த இயக்கத்தில் ? ஏன் இது உலகம் முழுதும் இப்படி பரவியது ?

எனக்கு தெரிந்த, எனக்கு பிடித்த சில விடயங்களை சுருக்கமாய் சொல்கிறேன்.

ஜாதி, மதம் மற்றும் இணம் என்பதெல்லாம் இஸ்கானில் இல்லை. வர்ண ரீதியான பிரம்மணத் தன்மையை இஸ்கான் ஊக்குவிக்கிறது. யார் எந்த ஜாதியில், மதத்தில், இணத்தில் பிறந்திருந்தாலும், தங்கள் தகுதியை வளர்த்துக் கொண்டு, பிராம்மணத் தன்மை பெற்று, அர்ச்சகர்களாய் மாறலாம். இஸ்கானில் நீ எந்த ஜாதி என்று யாரும் கேட்பதில்லை.

அற்புதமான அர்ப்பணிப்பு உணர்வு. வாய் வார்த்தைகளில் விளக்க முடியாத அர்ப்பணிப்பு உணர்வு. உலகெங்கும், குறிப்பாக‌ ரஷ்யாவில் மைனஸ் டிகிரி செல்ஷியஸ் குளிரிலும் விடிகாலையில் மங்கள ஆரத்தி நடக்கிறது. யாரையும், எவரையும் பற்றி கவலைப்படாமல் இரண்டு கைகளையும் உயர்த்தி இறைவனை சரணடையும் பக்குவம் வியக்கத் தக்கது. உதாரணத்திற்கு துளசி பூஜையை எடுத்துக் கொள்ளுங்கள். அதை அந்த அர்ச்சகர் செய்யும் போது, உண்மையில் அந்த துளசி தேவி அவருக்கு காட்சி அளிக்கிறாரோ என்பது போல் ஒரு லயிப்பு அவர் முகத்தில் தெரியும். ஒவ்வொரு சடங்குகளையும் இவர்கள் அத்தகைய ஈடுபாட்டோடுதான் செய்கிறார்கள். அவர்களின் அந்த ஈடுபாட்டுக்கு காரணமே ப்ரபுபாதாவின் பக்குவப்படுத்தப்பட்ட நெறிகளும், பயிற்சி முறைகளும்தான்.

இஸ்கானின் இசை வழிப்பாட்டை நீங்கள் எப்போவாவது கேட்க நேர்ந்தால் உங்களை அது ஆட்கொண்டுவிடும். அத்தனை சக்தி வாய்ந்தது "இஸ்கான் பஜன்ஸ்". "ஹரே கிருஷ்ண, ஹரே கிருஷ்ண, கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே, ஹரே ராம, ஹரே ராம, ராம ராம ஹரே  ஹரே கிருஷ்ண, ஹரே கிருஷ்ண, கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே, ஹரே ராம, ஹரே ராம, ராம ராம ஹரே ஹரேஹரே" என்ற மஹா மந்திரத்தை பல்வேறு ராகங்களில் மனதை சுண்டி இழுக்கும் வகையில் பாடுகிறார்கள். பெங்காலில் வாழ்ந்த இறைவனின் அவதாரமாக சொல்லப்படுகிற சைதன்ய மஹாபிரபு என்ற மஹானும், அவரின் வழி வந்தவர்களும் பாடிய அற்புதமான பாடல்களும் மெய்சிலிர்க்க வைப்பவை.

இவை எல்லாவற்றிற்கும் மேல் இங்கு விநியோகிக்கப்படும் ப்ரசாதம் எனும் இறை உணவுதான். இஸ்கானில் சேர கூடாது என நினைப்பவர்கள், இந்த ப்ரசாதத்தை உட்கொள்ளாமல் இருப்பது நல்லது. இறைவனுக்கு ஆத்மார்த்தமாக அர்ப்பணிக்கப்பட்ட இந்த ப்ரசாதம், நம் பசியை மட்டும் போக்காமல், நம் விழிப்புணர்வை மேம்படுத்துகிறது. அமிர்தம் என்று சொல்கிறார்களே, அது இதுதானா ? என்று நம்மை கேட்க வைக்கும் அற்புதம் அது. அதுவும் இஸ்கானின் தலைமையகமான மாயாபூரில் பிரசாதத்தை உண்டவர்கள் அங்கேயே நிரந்தரமாய் தங்கிவிடுவது கூட சாத்தியமாம்.

இஸ்கானில் சொந்த கருத்துக்களுக்கு இடம் இல்லை. ப்ரபுபாதா மற்றும் வைணவ குருமார்கள் தங்கள் ஞாணத்தால் சொல்லப்பட்டவை மட்டுமே பரிந்துரைக்க படுகின்றன. இடைசெருகல்களுக்கு இங்கு இடம் இல்லை. பகவத் கீதையையும், பாகவதத்தையும் உடனுக்குடன், எந்த ஸ்லோகம், எந்த பக்கத்தில் என்று சொல்லும் அளவிற்கு பயிற்றுவிக்கப் படுகிறார்கள். கேள்வி பதில் பகுதிகளை கொண்டு சொற்பொழிவுகள் ப்ரபுபாதா வழிமொழிந்ததை போலவே பின்பற்றப்படுகின்றன.

நான் பெரிது, நீ பெரிது, நான் தான் கடவுள் என்று அலையும் மூடத்தனத்தை இஸ்கான் எதிர்க்கிறது. இஸ்கானின் அனைத்து நெறிகளையும் ப்ரபுபாதா இறைவனை மையமாக கொண்டே அமைத்துள்ளார். இங்கு தனிமனிதர்களுக்கு முக்கியத்துவம் தரப்படுவதில்லை. விஞ்ஞானிகள், விவசாயிகள், மருத்துவர்கள், ஆடிட்டர்கள், வியாபாரிகள், மாணவர்கள் என பல்வேறு மக்களும் துறவரத்தை ஏற்றுக்கொண்டு இங்கு பணியாற்றுவதை கண்கூடாக பார்க்கலாம்.

இஸ்கானின் ரதயாத்திரை மிகப்பெரும் ஆண்மீக எழுச்சி. பல நாட்டவர்களும் பங்கெற்கும் இந்த யாத்திரையில் பல அற்புதங்களை நீங்கள் பார்க்கலாம். ஒரு பக்தர் இன்னொரு பக்தரை சந்திக்கையில் ஒருவர் மற்றவர் கால்க‌ளில் விழுந்து வணங்குவதற்கு போட்டி போடுவதையும் பார்க்கலாம். (இதை நம் தமிழ் ஆழ்வார்கள் "தண்ட நெறி" என்பார்கள். அதாவது ஒரு தண்டத்தை அதாவது தடியை கிழே போட்டால் அது எப்படி விழ வேண்டும், எங்கே விழவேண்டும் என்றெல்லாம் யோசிக்காமல் அப்படியே விழுமாம், அதைப் போல ஒரு தூய பக்தனை கண்டால், கண்ட மாத்திரத்தில் அப்படியே விழுந்து வணங்கவேண்டும் என்பதை குறிக்க‌ "அடியவருக்கு அடியவன்" எனும் இந்த வழக்கம் உள்ளது)

உத்திர பிரதேசத்தில் உள்ள கிருஷ்ண ஜண்ம பூமியான மதுராவில், நியுசிலாந்தை சேர்ந்த ஒரு கிருஷ்ண பக்தரை. சந்தித்த போது. அவர் சொன்னார் "நாங்கள் பொருள் சார்ந்த உலகத்திலேயே உழல்கிறோம், ஆனால் நீங்களோ பூர்வ ஜெண்ம புன்னியத்தால், பாரதம் என்னும் புன்னிய பூமியில் பிறந்துள்ளீர்கள், நீங்கள் மிகப்பெரும் பாக்கியவான்கள்" என்றார் அந்த பெரியவர். அவரை பற்றி கேட்டப்போது, "என்னை பற்றி சொல்ல ஒன்றும் இல்லை, நான் ஒரு சொகுசு கப்பல் வைத்திருந்தேன், ஆடம்பர வாழ்கை வாழ்ந்து வந்தேன், ப்ரபுபாதாவின் பக்தி நெறியில் ஈர்க்கப்பட்டு எல்லாவற்றையும் விட்டு விட்டு துறவறம் மேற்கொண்டுவிட்டேன், இப்போது ஆஸ்த்ரேலியாவில் வசிக்கிறேன் என்றார்.

ப்ரபுபாதா வாழ்ந்துக் கொண்டுதான் இருகிறார். நாம் உண்ணும் கிருஷ்ண பிரசாதத்தில், பாடும் பக்தி பாடல்களில், படிக்கும் கீதையில் என உலகம் முழுதும் அவர் பரப்பிய கிருஷ்ண உணர்வில் வாழ்ந்துக் கொண்டிருக்கிறார்

Thanks; Enlightened Master

பகவத் கீதை அற்ப்புதமான வகுப்பு கறக்க ; ஆச்சார்யர் பாரத சைதன்யர் click more

Leave a Reply