பா.ஜ.க.,வுடன் தேமுதிக கூட்டணி குறித்து இன்னும் 2 நாள்களில் முடிவு தெரியும் என, பா.ஜ.க மாநிலத் தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

நாகர் கோவிலில் திங்கள்கிழமை அவர் செய்தியாளர்களிடம் மேலும் கூறியதாவது:

பாஜக-தேமுதிக கூட்டணிசேருமா என்பது குறித்து பிப். 19-ஆம் தேதிக்குள் இறுதிமுடிவு செய்யப்படும். தமிழகத்தில் பா.ஜ.க.,வுக்கு 8 சதவிகித வாக்குகள் இருந்தன. இப்போது இளைஞர்கள்மத்தியில் கட்சிக்கு செல்வாக்கு உயர்ந்துள்ளது.

கட்சியில் ஏராளமான இளைஞர்கள் இணைந்து வருகின்றனர். எனவே, பா.ஜ.க.,வுக்கு 20 சதவிகிதம் அளவுக்கு வாக்குகள்கிடைக்கும் என நம்புகிறோம்.

மக்களவை தேர்தலில் பா.ஜ.க அதிகதொகுதிகளில் போட்டியிடும். கன்னியாகுமரி தொகுதியில் நான் போட்டியிடுவது குறித்து, கட்சித் தலைமை தான் முடிவுசெய்யும் என்றார் அவர்.

Leave a Reply