பாரதிய ஜனதா தலைமையிலான கூட்டணியில், தேமுதிக.வுக்கான தொகுதிகள்பற்றி பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக காந்திய மக்கள்கட்சியின் தலைவர் தமிழருவி மணியன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து கருத்துதெரிவித்த தமிழருவி மணியன், பா.ஜ.க கூட்டணியில் தேமுதிக.வுக்கு எத்தனை தொகுதி வழங்கப்படும் என்பதுகுறித்த பேச்சுவார்த்தை தற்போது நடைபெற்று வருகிறது,. இது இன்னும் 2 நாட்களில் இறுதிசெய்யப்பட்டு அறிவிக்கப்படும். பா.ஜ.க., தே.மு.தி.க., பா.ம.க. மற்றும் கொங்கு அமைப்புகளைக்கொண்ட சக்திவாய்ந்த ஒரு கூட்டணி அதிமுக. கூட்டணிக்கு மாற்றாக உருவாகும் என்றார்.

Leave a Reply