குஜராத் முதல்வர் நரேந்திரமோடி பங்கேற்ற பாட்னா பொதுக் கூட்டத்தில் நடைபெற்ற குண்டுவெடிப்பில் தொடர்புடைய 2 தீவிரவாதிகள் கைது செய்யப் பட்டுள்ளனர்.

பீகார் தலைநகர் பாட்னாவில் கடந்த அக்டோபர் 27ஆம் தேதி குஜராத் முதல்வரும் பாஜக. பிரதமர் வேட்பாளருமான நரேந்திரமோடி பங்கேற்ற பொதுக்கூட்டம் நடந்தது. அந்த பொதுக் கூட்ட மைதானத்தில் நடந்த தொடர் குண்டுவெடிப்பில் 8 பேர் பலியானார்கள். 10க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். இந்த தொடர் குண்டு வெடிப்பு வழக்கு விசாரணை, தேசிய புலனாய்வு நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டது.

இந்நிலையில், அந்த தொடர் குண்டு வெடிப்பில் தொடர்புடைய பக்ருதீன், அகமது என்ற 2 தீவிரவாதிகளை உ.பி., மாநிலம் மிர்சாபூரில், தேசிய புலனாய்வுத் துறையினர் கைதுசெய்துள்ளனர். அந்த இரண்டு தீவிரவாதிகளும், குண்டுவெடிப்பிற்கு பயன்படுத்தப்பட்ட பொருட்களை வாங்கிக் கொடுத்தவர்கள் என தெரிய வந்துள்ளது.

Leave a Reply