நாடாளுமன்றத் தேர்தலுக்கான 2-ம் கட்டவேட்பாளர் பட்டியலை பாஜக வெளியிட்டுள்ளது. இதில், கர்நாடகமாநிலம் ஷிமோகா தொகுதியிலிருந்து அம்மாநில முன்னாள் முதல்வர் எடியூரப்பா போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வேட்பாளர்களை இறுதி செய்வது குறித்தும் பிரச்சாரவியூகம் குறித்தும் டெல்லியில் அக்கட்சியின் மத்திய தேர்தல்குழு ஆலோசனை நடத்தியது.

இதில் பாஜக பிரதமர் வேட்பாளரும், தேர்தல் பிரசாரக்குழு தலைவருமான நரேந்திரமோடி, ராஜ்நாத் சிங்,அத்வானி, சுஷ்மாசுவராஜ், அருண்ஜேட்லி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றனர்.

மேலும் கட்சியின் மாநிலத் தலைவர்கள் சிலரும் கூட்டத்தில் கலந்து கொண்டனர். கூட்டத்தின் முடிவில், 6 மாநிலங்களில் உள்ள 52 தொகுதிகளுக்கான வேட்பாளர்களின் பெயர்களை பாஜக அறிவித்தது.

Leave a Reply