ஆர்எஸ்எஸ். அமைப்பின் செயற்குழு கூட்டம் நவமபர் .2 முதல் 4ம்    தேதி வரை சென்னையில் நடைபெறுகிறது நவமபர் .2 முதல் 4ம் தேதி வரை 3 நாட்கள், ஆர்எஸ்எஸ். அமைப்பின் செயற்குழு கூட்டம் சென்னையில் நடக்க உள்ளதாக தமிழக ஆர்எஸ்எஸ். செயலாளர் கே.குமாரசுவாமி அறிவித்துள்ளார்.

மேலும் இது குறித்து அவர் தெரிவித்திருப்பதாவது; ராஷ்ட்ரிய ஸ்வயம் சேவக சங்கத்தின் (RSS.) அகில பாரத செயற்குழுகூட்டம் சென்னையில் வருகிற நவ., 2,3,4 ஆகிய 3 நாட்கள் நடைபெற இருக்கிறது. சென்னை கேளம்பாக்கத்தில் இருக்கும் சுஷில்ஹரி இன்டர் நேஷனல் ரெசிடென்ஷியல் பள்ளியில் இந்தக்கூட்டம் நடைபெறும்.

இதில் ஆர்எஸ்எஸ். தலைவர் டாக்டர் மோகன்ஜி பாகவத், உள்ளிட்ட அனைத்து அகில பாரத நிர்வாகிகளும் கலந்து கொள்கின்றனர். அனைத்து மாநிலங்களிளும் உள்ள ஆர்எஸ்எஸ். தலைவர்கள், செயலாளர்கள், அமைப்பு செயலாளர்கள் , அகில பாரத செயற் குழு உறுப்பினர்கள் என மொத்தம் 400 பேர் இந்த கூட்டத்தில் கலந்து கொள்கின்றனர் .

மேலும் அகில பாரதீய வித்யார்த்தி பரிஷத் (ABVP), பாரதீய மஸ்தூர் சங்கம் (BMS), வனவாசி கல்யான் ஆஸ்ரம் (VKA), விஸ்வ ஹிந்து பரிஷத் (VHP), ஸ்வதேசி ஜாகரன் மஞ்ச் (SJM), சேவா பாரதி, வித்யா பாரதி, பா,ஜ,க(BJP) போன்ற அமைப்புகளின் அமைப்பு செயலாளர்களும் இதில் கலந்துகொள்கின்றனர்.

இந்த செயற்குழு கூட்டம் இயக்கத்தின் செயல்பாடுகள், எதிர் கால நடவடிக்கைகள் குறித்து விவாதித்து முடிவெடுக்கும். நாட்டில் தற்போது நிலவி வரும் பல்வேறு பிரச்னைகள் குறித்து இந்த கூட்டத்தில் விவாதித்து தீர்மானங்கள் நிறைவேற்றப்படும் என்று கே.குமாரசுவாமி தெரிவித்துள்ளார்.

Leave a Reply