வியாசமுனிவரை கர்ப்பதானம் தரவேண்டி அவர் சம்மதித்த பின் நடந்த நிகழ்வுகள் கீழ்க்கண்டவாறு அமைந்தன!

வியாச முனிவர் பெரும் ஞானி! ஆயினும் அவர் காண்பதற்கு லட்சணமற்ற தோற்றத்தைக் கொண்டவராகக் கூறப் படுகிறது! (ஒருவரின் ஞானத் தன்மைக்கும் அவர் வெளித்தோற்றத்துக்கும் எந்த சம்பந்தமுமில்லை என்பதன் வெளிப்பாடாக இதைக் கொள்ளலாம்!).

இதனால் முதலில் கர்ப்பதானம் பெற வந்த அம்பிகை வியாசரின் உருவை இருட்டிலும் கூட சுமாராக தெரியுமென்பதால் கண்களை அருவெருப்பால் மூடிக் கொண்டாளாம்!! அதனால் அவளுக்கு திருதராஷ்டிரன் என்னும் மகன் பிறவிக் குருடனாகப் பிறந்தான்!!

இரண்டாவதாக வந்த அம்பாலிகையோ இன்னும் மோசம்! அழகற்ற முனிவரிடம் கர்ப்பதானம் பெற வேண்டுமா என்றெண்ணி தனக்குப் பதில் தன் அரண்மனையில் உள்ள தாசி ஒருத்தியைப் பேசி சரிக்கட்டி அனுப்பி விட்டாளாம்!! வேறு வழியின்றி அந்தத் தாசியும் செல்ல அவளுக்கு மகனாகப் பிறந்தவன் விதுரன்!!

அம்பாலிகை கர்ப்பமாகாததால் குட்டு வெளிப்பட்டுப் போக வலுக்கட்டாயமாகத் திரும்பவும் கர்ப்ப தானம் பெற அனுப்பப்பட்டாள்!! அவ்வாறு வந்தவள் வியாசமுனிவரின் தோற்றத்தை எண்ணி அருவெறுத்த நிலையில் உடல் கூச வெளுத்துப் போய்க் கிடந்தாளாம்!! அவளுக்கு அவ்வாறே உடல்குறையுடன் பாண்டுரோகத்துடன் பாண்டு மகனாகப் பிறந்தானாம்!!

இப்படித்தான் விதுரனின் பிறப்பு சொல்லப் படுகிறது!! தாசிக்குப் பிறந்த மகன்தான் எனினும் கூட வியாச முனிவரின் அம்சத்துடனும் ஞானத்துடனும் பிறந்ததன் காரணமாக விதுரன் மிகவும் மதிக்கப் பட்டார்!! இன்னொன்று விதுரன் தர்மதேவதையின் அம்சம் கொண்டவராகவும் சொல்லப் படுகிறார்!! தர்மதேவதையின் முக்கியமான அம்சம் என்னவெனில் வேண்டியவர் வேண்டாதவர் என்னும் பாரபட்சமின்றி தர்மத்தை உரைப்பதே!! அதை அவர் கடைசி வரை பின்பற்றினார்!!!

இன்னொரு விஷயமும் விதுரனிடம் உள்ளது!! வியாசமுனிவரின் அம்சமென்பதால் அவரிடத்து இயல்பாகவே ஞானம் இருந்தது!! இன்னொன்று தாசியின் மகன் என்றால் அவனுக்கு அது ஒரு தாழ்வு மனப்பான்மையையே தரும்!!(INFERIORITY COMPLEX). ஆனால் விதுரனிடம் அது அறவே இல்லை!! ஆனால் அவருடைய பிறப்பும் கூட அவருக்கு இன்னொரு நல்ல குணத்தையுமே தந்தது!! அதுவே பணிவு!!

ஒரு முனிவரின் சக்தியுடன் மகாராணியின் சக்தி சேர்ந்தால் கூட பிறக்கும் குழந்தை ஒரு வித ராஜ தோரணையுடன் எவரையும் மதியாது இருக்கலாம்!! ஆனால் விதுரனின் பிறப்பு அவருக்கு பணிவு என்ற ஒரு நல்ல குணத்தைத் தந்தது!! பணிவு என்பது இருந்தாலுமே கூட தர்மத்தின் அம்சமாக விளங்கியதால் நியாயத்தை எந்தச் சூழலிலும் வலியுறுத்தும் துணிவும் அவரிடம் இருந்தது!!

நன்றி ;#‎TREASURES_OF_HINDUISM‬
‪#‎Dhrona_charya‬

தொடரும் …..

Leave a Reply