மறைந்த மத்திய மந்திரி கோபிநாத் முண்டேவின் 2 மகள்களும் தேர்தலில் போட்டியிட அதிக வாய்ப்பிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன..

மராட்டியத்தை சேர்ந்த மத்திய மந்திரி கோபிநாத் முண்டே பதவியேற்ற சில நாட்களிலேயே டெல்லியில் நடந்த கார் விபத்தில் மரணமடைந்தார். இவர் மராட்டிய மாநிலம் பீட் பாராளுமன்ற தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவர். அவர் மறைந்ததால் பீட் பாராளுமன்ற தொகுதி காலியாக உள்ளது. இங்கு இடைத்தேர்தல் நடத்த தேர்தல் கமிஷன் ஆலோசனை நடத்தி வருகிறது. மராட்டிய மாநில சட்டசபைக்கு விரைவில் தேர்தல் நடைபெற இருப்பதால் அதனுடன் சேர்த்து பீட் பாராளுமன்ற தொகுதி இடைத்தேர்தலும் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் முண்டேயின் மகள்களையே வேட்பாளர்களாக நிறுத்த வாய்ப்பிருப்பதாக தகவகள் வெளியாகியுள்ளன. .

முண்டேவின் மூத்தமகள் பங்கஜா முண்டே ஏற்கனவே அரசியலில் இருக்கிறார். பார்லிதொகுதி எம்எல்ஏ ஆவார். 2வது மகள் பிரீதம் முண்டே டாக்டராக பணிபுரிகிறார். ஏற்கனவே அரசியல் வாதியாக இருக்கும் பங்கஜாவை பீட்பாராளுமன்ற தொகுதியில் நிறுத்தவும், டாக்டர் பிரீதம் முண்டேயை பார்லிசட்டசபை தொகுதியில் நிறுத்தவும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது.

இது பற்றி மாநில பாஜ தலைவர் தேவேந்திர பத்னாவின் கூறும்போது, எங்கள் கட்சி வாரிசு அரசியலை எதிர்க்கிறது. அதேசமயம் தகுதியுடையவர்களை ஒதுக்கிவிட முடியாது என்றார் 

Tags:

Leave a Reply