தற்போது 2-வது கட்டமாக வேட்பாளர் பட்டியலை தமிழக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கட்சியின் தலைமை அலுவலகமான கமலாலயத்தில் வெளியிட்டார். அதன்படி, தூத்துக்குடி மாநகராட்சி மேயர் வேட்பாளராக கே.ஜெயலட்சுமி, திருநெல்வேலி மாநகராட்சி மேயர் வேட்பாளராக வெள்ளையம்மாள், கோவை மாநகராட்சி மேயர் வேட்பாளராக ஆர்.நந்தகுமார் அறிவிக்கப்பட்டனர்.

ராமநாதபுரம் நகராட்சி தலைவர் வேட்பாளராக துரைக்கண்ணன், புதுக்கோட்டை நகராட்சி தலைவர் வேட்பாளராக பழ.செல்வம், விருத்தாசலம் நகராட்சி வேட்பாளராக என்.சரவணன், கடலூர் நகராட்சி வேட்பாளராக பி.செல்வம், குன்னூர் நகராட்சி வேட்பாளராக பத்மநாதன் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

திருவண்ணாமலை மாவட்ட ஊராட்சி 31-வது வார்டு கவுன்சிலர் வேட்பாளராக முத்துசாமி, திருவண்ணாமலை மாவட்டம் ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் பதவி வேட்பாளர்களாக மாலதி(வடபாதி மங்களம்), முருகன்(மண்டகொளத்தூர்), சிவா (துறிஞ்சாபுரம்) ஆகியோரும் வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கான வேட்பாளராக மனோஜ்குமார், திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டு பேரூராட்சி தலைவர் பதவிக்கான வேட்பாளராக கிஷோர் ஆகியோர் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

Tags:

Leave a Reply