பிரதமர் நரேந்திரமோடி வரும் 22ம் தேதி விஜய தசமி அன்று ஆந்திர மாநிலத்துக்கு விஜயம்செய்ய உள்ளார். குண்டூர் அருகே ‘அமரா வதி’ என்ற பெயரில் ஆந்திர மாநிலத்தின் புதிய தலைநகரம் உருவாக்கப்படுகிறது. இதன் அடிக்கல் நாட்டுவிழாவில் கலந்துகொள்ள பிரதமர் நரேந்திர மோடி வரும் 22ம் தேதி ஆந்திரா செல்ல உள்ளது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி 22–ந் தேதி தில்லியில் இருந்து விமானத்தில் புறப்படும் அவர் 11.45 மணிக்கு ஐதராபாத் கண்ணவரம் விமானநிலையத்தில் வந்து இறங்குகிறார். பின் அங்கிருந்து ஹெலிகாப்டரில் குண்டூர் வந்துசேருகிறார். 12.35 மணிக்கு அமராவதி அடிக்கல் நாட்டுவிழாவில் பங்கேற்கிறார்.

பின்னர் மாலை 4 மணிக்கு ஹெலிகாப்டரில் ரேணிகுண்டா விமான நிலையத்திற்கு செல்கிறார். அங்கிருந்து கார்மூலம் திருப்பதி செல்லும் பிரதமர் மோடி ஏழுமலையானை தரிசனம்செய்கிறார். இதையடுத்து இரவு 7.30 மணிக்கு திருப்பதியில் இருந்து தில்லி திரும்புகிறார்.

பிரதமராக பதவி ஏற்றபின் மோடி முதன் முறையாக திருப்பதி வருவதால் அவரை வரவேற்க தேவஸ்தானம் தீவிர ஏற்பாடுகளை செய்துவருகிறது.

Leave a Reply