ஜம்மு-காஷ்மீரில் ஏற்பட்ட வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும்வகையில் நிதி திரட்டிய 16 வயது சிறுமிக்கு பிரதமர் நரேந்திரமோடி நன்றி தெரிவித்து கடிதம் எழுதியுள்ளார்.

குவைத்தில் வசித்து வரும் 16வயது சிறுமி துவ்வுரி ரோகினிபிரத்யுஷா. பாரதிய வித்யாபவன் பள்ளியில் 12 ஆம் வகுப்பு படித்துவரும் இவர் ஜம்மு காஷ்மீரில் ஏற்பட்ட வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிபுரியும் நோக்கத்தில் குவைத்தில் வசித்துவரும் இந்தியர்களை சந்தித்து அவர்களிடம் ரூ. 2.15 லட்சம் நிதி திரட்டி அதனை குவைத்தில் உள்ள இந்திய தூதரகத்தில் ஒப்படைத்துள்ளார். குவைத்திலிருந்து இத்தொகை பிரதமர் நிவாரண நிதிக்கு அனுப்பப்பட்டது.

துவ்வுரியின் இச்செயலை பாராட்டி நன்றிதெரிவிக்கும் வகையில் பிரதமர் நரேந்திரமோடி அவருக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். அந்த கடிதத்தில், வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்கள் மீது அக்கறைகொண்டு செயல்பட்ட சிறுமியின் தலைமை மற்றும் நிர்வாக திறன்களை பாராட்டுவதுடன், அவருக்கு நன்றி தெரிவித்து கொள்வதாக குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply