'தமிழக கோயில்களுக்கு சொந்தமாக நிலம் உட்பட பலகோடி ரூபாய் சொத்துகள் உள்ளன. இதில்வரும் வருமானத்தில் அதிகபணம் கோயில் அதிகாரிகளின் ஊதியம், சொகுசுவசதிகளுக்காக செலவு செய்யப்படுகிறது.

கோயில்களில் பக்தர்களுக்கு தேவையான குடி நீர், கழிப்பறை போன்ற அடிப்படைவசதிகள் இல்லை. அவர்களை ஆடு, மாடுகள்போல நடத்துகின்றனர். " 2ஜி ஸ்பெக்ட்ரம்" ஊழலை காட்டிலும் பல கோடி ரூபாய் அளவிற்கு கோயில்களில் ஊழல் நடக்கிறது.

கோயில் ஆண்டு வருமானத்தை வெள்ளை அறிக்கையாக வெளியிடவேண்டும். பழநி மலைக் கோயில் படியிலுள்ள வேற்றுமதத்தினர் கடைகளை அகற்றவேண்டும். தமிழக கோயில்களுக்கு தனி வாரியமாக இயங்க வேண்டும். இந்து அமைப்பு தலைவர்கள் கொலை செய்யப்படுவதும், தாக்கப்படுவதும் தொடர்கிறது. ஓட்டுக்கு ஆசைப்பட்டு குற்றவாளிகளை கைதுசெய்ய தமிழக அரசு தயக்கம்காட்டுகிறது. இதன்பலனை தேர்தலில் அவர்கள் அனுபவிப்பர். நாடுமுழுவதும் "நரேந்திர மோடி" என்ற சுனாமி அலை எழுந்துள்ளது. அவர் தலைமையில் ஆட்சி அமையவேண்டும்'' என்றார்.

Tags:

Leave a Reply