டாக்கா – கடந்த 20 ஆண்டுகளாக தேடப்பட்டுவந்த உல்பா தீவிரவாத இயக்க தலைவர் அனுப் சேத்தியாவை இந்தியாவிடம் ஒப்படைத்தது வங்க தேசம்.  மும்பை நிழல்உலக தாதா சோட்டா ராஜன் இந்தோனேசியாவில் கைதுசெய்யப்பட்டு இந்தியாவிடம் அண்மையில் ஒப்படைக்கபட்டார். 27 ஆண்டுகளுக்குப் பின்னர் அவர் இந்தியா கொண்டுவரப் பட்டுள்ளார். இந்நிலையில், உல்பா தீவிரவாத இயக்கத்தலைவர் சேத்தியாவை வங்கதேசம் நேற்று காலை இந்தியாவிடம் ஒப்படைத்துள்ளது. 48 வயதான அனுப்சேத்தியா தடை செய்யப்பட்ட யுனைடட் லிபரேஷம் பிரண்ட் ஆஃப்அசாம் (உல்பா) இயக்கத்தின் நிறுவனர் பொதுச்செயலாளர் ஆவார். அவர்மீது கொலை, ஆட்கடத்தல், வங்கிக்கொள்ளை, பணம் பறித்தல் போன்ற பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன.

இந்நிலையில் அவரை வங்க தேசம் இந்தியாவிடம் ஒப்படைத்துள்ளது. இதுகுறித்து உயரதிகாரிகள் கூறியதாவது: பிரதமர் மோடியின் தலையீட்டாலும், தேசியபாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் முயற்சிகளாலும் கோபால்பருவா என்ற அனுப் சேத்தியாவை வங்கதேசம் இந்தியாவிடம் ஒப்படைத் துள்ளது.  

கடந்த 20 ஆண்டுகளாக, அனுப் சேத்தியாவை நாடுகடத்துமாறு வங்கதேசத்திடம் இந்தியா கோரிவந்தது. ஆனால், அண்மையில் தான் ஷேக்ஹசீனா தலைமையிலான அரசு இதற்கு ஒப்புக்கொண்டது. இதற்காக சேத்தியாவிடம் வாக்கு மூலத்தை பெற்றது வங்கதேசம். அந்த வாக்குமூலத்தில் தான் இந்தியா திரும்பவே விரும்புவதாக சேத்தியாக குறிப்பிட்டிருக்கிறார் என்றனர்.

Leave a Reply