பல்வேறு பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகளை, மத்திய அரசு மேற்கொண்டுவருகிறது. சர்வதேச அளவில், பொருளாதாரம் மீண்டு வருகிறது.

கட்டமைப்பு துறைகளில், அதிக முதலீட்டு வாய்ப்புகள் ஏற்பட்டுள்ளன. இந்தகாரணங்களால், அடுத்த, 20 ஆண்டுகளில், இந்தியா, பிரமாண்ட பொருளாதார வளர்ச்சியை காண்பதற்கு, அதிகவாய்ப்புகள் உள்ளன.

கடந்த, 2014ல், பா.ஜ., அரசு அமைந்தபோது, நிழல் பொருளாதார நடவடிக்கைகள் தொடர்வதை, அனுமதிக்க வேண்டிய கட்டாயத்தில், அரசுஇருந்தது.

அதை விரும்பாமல்,நாட்டின் பொருளாதாரத்தை சீரமைக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டோம். செல்லாத ரூபாய் நோட்டு அறிவிப்பு, அதில் எடுக்கப்பட்ட மிகமுக்கியமான, தைரியமான முடிவு.


இதனால்,சிலகாலத்துக்கு,சிலபாதிப்புகள் இருக்கும் என்பதை,அரசு உணர்ந்திருந்தது. ஆனால், நீண்டகால அடிப்படையில்,அதிகபலன் கிடைக்கும். தொழில் துவங்குவதற்கான சிறந்த வாய்ப்புகளை அளித்துவருகிறோம். பணப் பரிவர்த்தனைகளை, 'டிஜிட்டல்' மயமாக்கும் முயற்சிக்கு, நல்லபலன் கிடைத்துவருகிறது. 'ஆதார்' மூலம், இழப்புகள் தவிர்க்கப்பட்டு உள்ளன. ஜிஎஸ்டி., எனப்படும், சரக்கு மற்றும் சேவைவரி விதிப்பு முறையால், நாட்டை ஒரேசந்தை ஆக்கியுள்ளோம்.

அரசின் பொருளாதார நடவடிக் கைகளால், சிலருக்கு, சிலபாதிப்பு இருக்கும். ஆனால், நீண்ட நாள் அடிப்படையில், நாட்டின் பொருளாதாரம், பிரமாண்டவளர்ச்சி காண்பதற்கு, இந்த சீர்திருத்தங்கள் உதவும்.

அமெரிக்கா மற்றும் இந்தியாவைச் சேர்ந்த, முன்னணி நிறுவனங்களின் தலைவர்கள், அமெரிக்க அரசின், மூத்த அதிகாரிகள் பங்கேற்ற நிகழ்ச்சியில், அருண் ஜெட்லி பேசியது:

Leave a Reply