தமிழக பா.ஜ.க.தலைமை அலுவலகமான சென்னை கமலால யத்தில் பாஜக மாநில தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தர ராஜன் வெள்ளிக்கிழமை செய்தியாளர்களிடம் கூறியதாவது,

பாஜக.தேசிய தலைவர் அமித்ஷா வருகிற 20-ந் தேதி சென்னை வருகிறார். 20 மற்றும் 21 ஆகிய 2 நாட்கள் தங்கி பொது நிகழ்ச்சிகள், கட்சி நிகழ்ச்சிகள், தமிழக பாஜக. நிர்வாகிகள், தொண்டர்களை சந்திக்கிறார்.

தமிழகத்தில், 'கோடி உறுப்பினர்களை சேர்ப்போம், மோடி ஆட்சி அமைப்போம்' என்ற நோக்கத்தை அடிப்படையாக கொண்டு இது வரை நான் தமிழ்நாட்டில் 42 மாவட்டங்களில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளேன். தமிழ்நாட்டில் இதுவரை 1 லட்சம் பேர் பாஜக.வில் இணைந்துள்ளனர். சென்னையில் 35 ஆயிரம்பேர் சேர்ந்துள்ளனர். என்று அவர் கூறினார்.

Leave a Reply