கொலை குற்றவாளிகளை 20 நாட்களுக்குள் கைதுசெய்யாவிட்டால்  மீண்டும் போராட்டம் வேலூரில் பாரதிய ஜனதா மாநில மருத்துவ அணி செயலாளர் டாக்டர் அரவிந்த்ரெட்டியை 3 பேர் கொண்ட கும்பல் கொடூரமாக வெட்டிகொலை செய்தது. இந்த படு கொலையை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் பாரதிய ஜனதாவினர் தமிழ்நாடு முழுவதும் பாரதிய ஜனதாவினர் நேற்று  ஆர்ப்பாட்டம் செய்தனர் .

இதனை தொடர்ந்து நேற்று பா.ஜ.க வினர் வேலூரில் கலெக்டர் அலுவலகம் அருகே பொன்.ராதாகிருஷ்ணன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர் . சென்னை கோட்டபொருப்பாளர் தசரதன், வேலூர் கோட்ட பொருப்பாளர் விஜயசேகரன், மாவட்ட தலைவர்கள் பிரகாஷ், உள்ளிட்ட 600க்கும் அதிகமானோர் கலந்து கொண்டனர்.

கொலை குற்றவாளிகளை கைதுசெய்யகோரி ஆர்ப்பட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோஷங்களை எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தில் பொன்.ராதாகிருஷ்ணன் பேசியதாவது:-

பாரதிய ஜனதாவை சேர்ந்த ஒருவர் கொலைசெய்யப்படுகிறார் என்றால் அதற்கு ஒரேகாரணம் தான் இருக்க முடியும். இங்கே தேச பக்தி வளர்கிறது. இதனை அழிக்கவேண்டும் என்பதற்காகதான் கொலை நடந்துள்ளது. இதில் பயங்கரவாத சக்திகள்தான் ஈடுபட்டுள்ளது. அரவிந்த்ரெட்டி கொலைக்கு வேறு எந்த காரணமும் இல்லை. வேறுகாரணங்களை கூறி போலீசார் திசை திருப்பினால் தர்மம் அவர்களை தண்டிக்கும். முதல்-அமைச்சர் மீதும் காவல்துறை மீதும் நம்பிக்கை உள்ளது.

கடந்த ஆட்சியிலிருந்த சூழ்நிலை தற்போது தொடர்ந்துவருகிறது. 2003ம் ஆண்டு தா.கிருஷ்ணன் வெட்டிபடுகொலை செய்யப்பட்டார். அதற்கு பிறகு பல்வேறு கொலைசம்பவங்கள் நடந்துள்ளன. இதில் குற்றவாளிகளை கைதுசெய்ய முடியவில்லை. அப்படியே கைதுசெய்தாலும் சரியான தண்டனை வழங்கபடவில்லை. இதனால் பயங்கரவாதிகள், கொலை காரர்கள் சாதாரணமாக நடமாடுகின்றனர்.

அரசு துணிச்சலான நடவடிக்கை எடுத்தால்மட்டுமே இதனை கட்டுப்படுத்த முடியும். காஞ்சிபுரம், திருவள்ளுவர் மாவட்டங்களில் கடந்த சிலமாதங்களில் 9 கொலைகள் நடந்துள்ளது. இதில் பெரும்பாலான கொலைகள் அரசியல் சம்பந்தப்பட்டது. அரவிந்த்ரெட்டி 17 இடங்களில் வெட்டப்பட்டும் குத்தப்பட்டும் கொலை செய்யப்பட்டுள்ளார். இந்த கொடூரசெயலை செய்தவர்களை கண்டுபிடிக்க முடியவில்லை. இது காவல் துறை செயல் இழந்துவிட்ட சூழ்நிலையை காட்டுகிறது.

அரவிந்த்ரெட்டி கொலை குற்றவாளிகளை 20 நாட்களுக்குள் கைதுசெய்யாவிட்டால் வேலூரில் எனது தலைமையில் மீண்டும் போராட்டம் நடத்தபடும் என்று அவர் கூறினார்

Tags:

Leave a Reply