ஒடிசா மாநிலத்தில் நவீன்பட் நாயக் ஆட்சியை கவிழ்க்க ஒவ்வ‌ொரு எம்.எல்.ஏ.க்களும் ரூ. 1 முதல் 2 கோடி வரை இலஞ்சம் தர பேரம் பேசப்பட்டதாகவும் இதற்க்காக குவாரி உரிமையாளர்களிடம் ரூ. 200 ‌கோடிவரை வசூலித்ததாகவும் பியாரி மோகன் மொ‌கபாத்ரா மீது எம்எல்ஏ. சுபர்னா நாயக் குற்றம் சுமத்தியுள்ளார்.

மேலும் இதுகுறித்து அவர் தெரிவித்ததாவது , கடந்த மே 26ம் தேதி ஒடிசா ரூர்கேலா நகரில் மெகோபாத்ரா ரகசிய கூட்டத்தை நடத்தியுள்ளார். தனக்கு ஆதரவாகசெயல்பட ஒவ்வொரு பிஜூ ஜனதாதள் எம்எல்ஏ.க்களுக்கும் ரூ. 1 முதல் 2 கோடி வரை பேரம்பேசப்பட்டனர். அப்போது எம்எல்ஏ.க்கள் கூட்டம் என்ற பெயரில் நானும் கலந்துகொண்டேன். நவீன்பட்நாயக் ஆட்சியை கவிழ்க்க ஒடிசாவில் உள்ள முக்கிய குவாரி , சுரங்க உரிமையாளர்களிடம் ரூ. 200 கோடி வரை பணம்பெற்றுள்ளார் என்று குற்றம் சாட்டினர் .

Leave a Reply