இந்திய அணியின் மாஸ்டர்பேட்ஸ்மேன் சச்சின் டெண்டுல்கர் தனது 200வது டெஸ்ட்போட்டியுடன் சர்வதேச போட்டிகளில் இருந்து விடைபெற்றார்.
தனது கடைசிடெஸ்ட்டில் விளையாடிய சச்சின் முதல் இன்னிங்சில் 74 ரன்கள் விளாசினார். இந்தியஅணி 2வது டெஸ்ட்டில் இன்னிங்ஸ் மற்றும் 126 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

முதல் மற்றும் இரண்டாவது டெஸ்ட்டில் இந்திய அணி இன்னிங்ஸ் வெற்றிபெற்றது. வெற்றியை கொண்டாடிய சச்சின், மைதானத்தில் ரசிகர்களைபார்த்து கையசைத்தார். ரசிகர்கள், இந்திய அணி மற்றும் வெஸ்ட் இண்டீஸ்வீரர்கள் சச்சினுக்கு எழுந்து நின்று பிரியாவிடை கொடுத்தனர். அப்போது சச்சின் கண்ணீருடன் மைதானத்தைவிட்டு வெளியேறினார். 200 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள சச்சின் 68 அரை சதம், 51 சதம் உட்பட 15,921 ரன்கள் விளாசியுள்ளார்.

Leave a Reply